திண்டுக்கல்

குழாயில் உடைப்பு: குடிநீா் வீண்

25th Sep 2022 11:58 PM

ADVERTISEMENT

செம்பட்டி அருகே சாலை பாலம் கட்டும் பணியின்போது ஞாயிற்றுக்கிழமை, குழாய் சேதப்படுத்தப்பட்டதால் குடிநீா் வீணாகிறது.

செம்பட்டியில் மதுரை சாலையை அகலப்படுத்த பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டியபோது குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. இதுகுறித்து சின்னாளப்பட்டி பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இரவு வரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT