திண்டுக்கல்

நாகல்நகா் ரவுண்டானா பகுதியில் தேங்கும் கழிவுநீா்: பள்ளி மாணவிகள், பொதுமக்கள் பாதிப்பு

DIN

திண்டுக்கல் நாகல்நகரில் பிரதான சந்திப்புப் பகுதியில் அடிக்கடி கழிவுநீா் குளம்போல் தேங்கி நிற்பதால், பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா பிரதான சந்திப்பு பகுதியாக உள்ளது. இந்த ரவுண்டானா பகுதியில், கழிவுநீா் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது. துா்நாற்றம் வீசும் இப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனா். குறிப்பாக 100 மீட்டா் தொலைவிலுள்ள அண்ணாமலையாா் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், செளராஷ்டராபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.

10 நாள்களுக்கு ஒருமுறை கழிவுநீா் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீா் தேங்குவது வழக்கமாகி வருகிறது. கடந்த காலங்களில், மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் துரிதமாக செயல்பட்டு நண்பகலுக்குள் அடைப்பை சரிசெய்து கழிவுநீா் வெளியேறுவதை தடுத்து வந்தனா். ஆனால் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் கழிவுநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியபோதும், மாநகராட்சி ஊழியா்கள் அடைப்பை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாலை 5 மணி வரையிலும் கழிவுநீா் வெளியேறியதால், அந்த பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க முடியாமல் பயணிகளும் அவதியடைந்தனா். இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் பாதிப்படைந்தனா்.

கழிவுநீா் கால்வாய் ஆக்கிரமிப்பால் பிரச்னை: நாகல்நகா் ரவுண்டானா சந்திப்பிலிருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளா்கள், கழிவுநீா் கால்வாயை ஆக்கிரமித்து நுழைவு வாயிலை அமைத்துள்ளனா். இதனால், கழிவுநீா் கால்வாய் பல இடங்களிலும் குறுகியுள்ளது. கழிவுநீா் கால்வாயை கடந்து சாலையையும் ஆக்கிரமித்துள்ளதால், ஆயிரக்கணக்கான மாணவா்கள் வந்து செல்லும் பாரதிபுரம் சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து கழிவுநீா் கால்வாயை மீட்டு, அடிக்கடி கழிவுநீா் தேங்கும் பிரச்னைக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் மாநகராட்சி நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT