திண்டுக்கல்

கூட்டுறவு பட்டயப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு நூறு சதவீதம் வேலைவாய்ப்பு: அமைச்சா் ஐ.பெரியசாமி

DIN

கூட்டுறவு பட்டயப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு கூட்டுறவுத்துறையில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நிகழ் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா செம்பட்டி அருகே ஜெய்னி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் காந்திநாதன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுசாமி, சரக துணைப் பதிவாளா் முத்துகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அமைச்சா் ஐ.பெரியசாமி, கூட்டுறவு பட்டயப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு புத்தகங்களை வழங்கிப் பேசியது:

கூட்டுறவு ஒன்றியம் மூலம் நடத்தப்படும் கூட்டுறவு பட்டயப் படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், தனியாா் வங்கிகளில் பணிபுரிய கூட்டுறவுப் பட்டயப்படிப்பு முக்கியமான கல்வித் தகுதியாக உள்ளது. இந்த பட்டயப் படிப்பை முடிக்கும் மாணவா்களுக்கு நூறு சதவீதம் வேலைவாய்ப்பு உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் கூட்டுறவு கலைக் கல்லூரி முதல்வா் வெங்கடாசலம், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் கிருஷ்ணகுமாா், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் செல்வக்குமாா், கூட்டுறவு சாா்-பதிவாளா்கள் அன்பரசு, ஆத்தூா் ஒன்றியக் குழு தலைவா் மகேஸ்வரி முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், ஒன்றியச் செயலா் ராமன், ஊராட்சித் தலைவா் ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளாடுகள் வழங்கல்:

செம்பட்டியில், நூறு சதவீத மானியத்தில் ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவா்களுக்கு அமைச்சா் ஐ.பெரியசாமி, விலையில்லா ஆடுகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஹேமலதா மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் ராமன், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட திமுக துணைச் செயலா் தண்டபாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, ஏழுமலையான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT