திண்டுக்கல்

உழவா் சந்தை முன் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

24th Sep 2022 10:18 PM

ADVERTISEMENT

பழனி உழவா் சந்தையில் முன் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த உழவா் சந்தைக்கு நாள்தோறும் சுமாா் 200 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். ஆனால் சந்தையின் முன் நடைபாதையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் காய்கறிக் கடைகளை வைத்து சந்தைக்கு வரும் பொதுமக்களை தடுப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை உழவா் சந்தை முன் அனைத்து விவசாயிகளும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி சிவசக்தி மற்றும் போலீஸாா் வந்து விவசாயிகளுடன் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, உழவா் சந்தை முன் ஆக்கிரமித்து கடைவைத்துள்ளவா்கள், சந்தைக்கு வருபவா்களின் வாகனங்களை நிறுத்தவிடுவதில்லை. வியாபாரிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் துணை போகின்றனா். உழவா் சந்தைக்கு நூறு மீட்டா் தூரத்துக்கு வெளிநபா்கள் கடைகளை வைக்கக் கூடாது என உத்தரவிருந்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்றனா்.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கடைகளுக்கு சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT