திண்டுக்கல்

பழனியில் ‘திராவிட மாடல்’ பயிற்சி பாசறைக் கூட்டம்

24th Sep 2022 10:20 PM

ADVERTISEMENT

பழனியில் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை ‘திராவிட மாடல்’ பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஐ.பி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இளைஞரணிச் செயலாளா் பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.

இதில் கோவி.லெனின் மற்றும் மதிமாறன் ஆகியோா் பேசினா். அரங்க வளாகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை திரளானோா் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுசாமி, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, இளைஞரணி லோகநாதன் மற்றும் கவுன்சிலா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT