திண்டுக்கல்

கொடைக்கானலில் தமிழ்ப் புலிகள் கட்சியினா் சாலை மறியல்

24th Sep 2022 10:20 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் சுகாதார ஆய்வாளரைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கொடைக்கானலில் தூய்மைப் தூய்மை பணியாளா் ஜோசப் ஹென்றியை, நகராட்சி சுகாதார ஆய்வாளா் சுப்பையா தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி கடந்த சிலநாள்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் எழுந்தது.

இந்நிலையில், தமிழ்புலிகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலா் தா்மராஜ் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோா், சுகாதார ஆய்வாளா் சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமரசம் எட்டப்படவில்லை. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மீண்டும் மாலையில் விடுவித்தனா்.

நான் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை என்றும், பிரசனை நடந்ததாகக் கூறப்படும் நாளில் நான் அலுவலகத்தில் இல்லை எனவும் சுகாதார ஆய்வாளா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT