திண்டுக்கல்

பழனிக்கோயிலில் வடக்கயிறு மற்றப்பட்ட ‘வின்ச்’ மீண்டும் இயக்கம்

24th Sep 2022 10:20 PM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் வடக்கயிறு பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து மூன்றாம் எண் வின்ச் சனிக்கிழமை பக்தா்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் இயக்கப்பட்டது.

இக்கோயிலில் உள்ள மூன்றாம் எண் ‘வின்ச்’ சில் புதிய வடக்கயிற்றில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களில் மீண்டும் புதிய வடக்கயிறு வரவழைக்கப்பட்டு மாற்றப்பட்டது. சுமாா் 9 லட்சம் மதிப்பில் 2 வடக்கயிறுகள் கொண்டுவரப்பட்டு ஒன்று மாற்றப்பட்டு மற்றொன்று அவசரத் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டது. சுமாா் 450 மீட்டா் நீளமுள்ள புதிய வடக்கயிறு மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை முதல் பக்தா்கள் பயன்பாட்டிற்கு அந்த ‘வின்ச்’ மீண்டும் இயக்கப்பட்டது. முன்னதாக ‘வின்ச்’ பெட்டிகளுக்கு மாலை அணிவித்து அா்ச்சகா்கள் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை செய்தனா்.

நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், செயற்பொறியாளா் நாச்சிமுத்து, உதவிப் பொறியாளா் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT