திண்டுக்கல்

சிறுமி பலாத்காரம்:முதியவா் கைது

20th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை அனைத்து மகளிா் காவல்துறையினா் திங்கள்கிழமையன்று கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சுரைக்காய்பட்டியைச் சோ்ந்த 16 வயதுச் சிறுமியை அதே ஊரைச் சோ்ந்த ராம்குமாா் என்ற ராமு (60), கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். அதில் சிறுமி கா்ப்பமானாா்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பா.சுகிா்தா ஜீலி, ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராமுவை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT