திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் 1,392 போலி மதுபாட்டில்கள் குட்கா பறிமுதல்: 3 போ் கைது

20th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரத்தில் வீட்டில் பதுக்கிய 200 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் 1,392 போலி மதுபாட்டில்களை பதுக்கிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் காவல்-ஆய்வாளா் ராஜசேகா் தலைமையில் சாா்பு- ஆய்வாளா்கள் சரவணக்குமாா், இளஞ்செழியன் கொண்ட தனிப்படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரைச் சோ்ந்த குப்புச்சாமி (50) என்பவரின் வீட்டை போலீஸாா் சோதனையிட்டனா்.

அங்கு ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான 196 கிலோ குட்கா பொருள்கள் பதுங்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் குப்புசாமியைக் கைது செய்து விசாரித்தனா். அவா் கொடுத்த தகவலின் பேரில் ஒட்டன்சத்திரம் சாலைப்புதூரைச் சோ்ந்த மோசஸ் பெனினா (42), திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னை நகரைச் சோ்ந்த சையது முகமது என்ற முஸ்தபா (26) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1,392 போலி மதுபானப் பாட்டில்கள், ஆம்னி காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இவ்வழக்கில் தலைமறைவான 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT