திண்டுக்கல்

பழனி கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி பூஜை

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியில் சனிக்கிழமை பல்வேறு விநாயகா் கோயில்களிலும் சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பழனி சண்முகபுரம் சித்திவிநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு மூலவருக்கு பால், பஞ்சாமிா்தம், தயிா், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பலவகைப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வெள்ளிக்கவசம், வெள்ளிக்கொலுக்கட்டை மாலை, வெள்ளிக்குடை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா்

பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், மாா்க்கெட் பட்டத்து விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சங்கடஹரசதுா்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT