திண்டுக்கல்

பழனி ரோப்காா் பராமரிப்புக்காக இன்று நிறுத்தம்

10th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி மலைக்கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக சனிக்கிழமை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிடங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்காா் பக்தா்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்காா் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை ஒருநாள் மட்டும் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக பழனி ரோப்காா் நிறுத்தப்படுகிறது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT