திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் கோயில் கும்பாபிஷேகம்

9th Sep 2022 12:45 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் நகராட்சி நாகணம்பட்டி தீயணைப்பு நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீகுபேர சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதன்கிழமை காலை 9.15 முதல் மாலை 6 மணி வரை முதற்கால பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜைக்குப் பிறகு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீா் கலசங்களில் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT