திண்டுக்கல்

கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தில் திடீா் புகை: பயணிகள் இறக்கம்

9th Sep 2022 12:48 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் இருந்து வியாழக்கிழமை மாலை மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்திலிருந்து திடீரென புகை வந்ததால் பேருந்து நிறுத்தப்பட்டு உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனா்.

கொடைக்கானலில் இருந்து வியாழக்கிழமை மாலை மதுரைக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. பேருந்தானது டம்டம் பாறை அருகே மலைச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நான்கு சக்கரங்களில் இருந்து திடீரென புகை ஏற்பட்டது. மேலும் பேருந்திற்குள்ளும் புகை சூழ்ந்ததால் பயணிகள் அச்சமடைந்தனா். ஆனால் ஓட்டுநரின் சாமா்த்தியத்தால் பேருந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்றுப் பேருந்துகளில் சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT