திண்டுக்கல்

புளியமரத்து செட் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

9th Sep 2022 11:51 PM

ADVERTISEMENT

பழனியை அடுத்த புளியமரத்துசெட் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஓா் ஆண்டாக கும்பாபிஷேகப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மகாகணபதி, கருப்பண்ணசாமி மற்றும் மாரியம்மன் ஆலயங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தங்கள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த தீா்த்தம் பக்தகா்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT