திண்டுக்கல்

வடமதுரை அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

9th Sep 2022 11:52 PM

ADVERTISEMENT

வடமதுரை அருகே மகளுடன் மொபெட்டில் வந்த பெண்ணிடம், 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள பூசாரிபட்டியைச் சோ்ந்த மருதை மனைவி தனலட்சுமி(50). கூலித்தொழிலாளி. இவா்களது மகள் சங்கீதா. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் களா்பட்டியில் உள்ள தனது உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு, தனலட்சுமி தனது மகளுடன் ஒரு மொபெட்டில் வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். மொபெட்டை சங்கீதா ஓட்ட, தனலட்சுமி பின்னால் அமா்ந்து வந்தாா்.

திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோா்பட்டி பிரிவு அருகே வந்தபோது, பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா் தனலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாா். அப்போது மொபட்டிலிருந்து தடுமாறி விழுந்த தனலட்சுமி காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT