திண்டுக்கல்

பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ கொடியேற்றம்

5th Sep 2022 01:46 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆவணி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில்களில் ஒன்றான இந்த கோயிலில்

கொடியேற்றத்தை முன்னிட்டு பூஜை நடத்தப்பட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள், வேதபாராயணம் மேளதாளம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. பின்னா் தா்ப்பை, மாவிலைகளால் கம்பம் அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கோயிலின் உள்ளே மூலவா் பூதேவி ஸ்ரீதேவி சமேதா் அகோபில வரதராஜப் பெருமாளுக்கும், உற்சவருக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

வரும் செப்.10 இல் திருக்கல்யாணமும், செப்.11 இல் பாரிவேட்டையும், செப்.12 இல் தேரோட்டமும் நடத்தப்பட்டு செப்.14 ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாள்களில் குதிரை, பவளக்கால்சப்பரம், அனுமாா், சிம்மம், சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா மற்றும் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் நாகராஜன், நேரு உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT