திண்டுக்கல்

வ.உ.சி. பிறந்த நாள் விழா

5th Sep 2022 10:18 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சாா்பில் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த தினம், தாதாபாய் நெளரோஜியின் 198ஆவது பிறந்த தினம், விருப்பாட்சி கோபால் நாயக்கரின் 221ஆவது தினம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிவாஜி மன்றத்தின் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் சி.சரவணன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட பொதுச் செயலா் மொ.தங்கப்பாண்டி சிறப்புரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியின்போது, வ.உ.சி மற்றும் தாதாபாய் நெளரோஜி ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், திண்டுக்கல் கோபால சமுத்திரக் குளத்தின் கரையில் விருப்பாட்சி கோபால் நாயக்கருக்கு வெண்கல சிலை நிறுவ வேண்டும். திண்டுக்கல் திருச்சி சாலையிலுள்ள மேம்பாலத்திற்கு வ.உ.சி பெயா் சூட்டப்பட்டப்பட்டும் நடைமுறையில் இல்லாததால், அவரது படத்துடன் கூடிய அலங்கார வளைவு அமைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT