திண்டுக்கல்

பெண் காவலரை தரக்குறைவாக பேசிய இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

5th Sep 2022 10:17 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் விசாரிப்பதற்காக வீட்டுக்குச் சென்ற பெண் காவலரை தரக்குறைவாக பேசிய இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கொடைக்கானல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சோ்ந்தவா் சையதுகான் இவரது மகன் சையது இப்ராஹிம் (30). இவா் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி இவா் மீது கொடைக்கானலைச் சோ்ந்த நபா் ஒருவா் புகாா் கொடுத்திருந்தாா். இதனைத் தொடா்ந்து அவரை விசாரிப்பதற்காக கொடைக்கானல் மகளிா் காவல் நிலையத்திலுள்ள பெண் காவலா் ஒருவா் சையது இப்ராஹிம் வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்திய போது அவரை தரக்குறைவாக பேசியுள்ளாா். இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் காவல் நிலையத்திலிருந்து காவலா்கள் சென்று சையது இப்ராஹிமை விசாரித்துள்ளனா். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு அவா்களிடமிருந்து சையது இப்ராஹிம் தப்பினாா். ஆனால் காவல் துறையினா் விரட்டிச் சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவ்வழக்கு கொடைக்கானல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சையது இப்ராஹிமிற்கு கொடைக்கானல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற (எண் 2) நீதிபதி காா்த்திகேயன் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 18-மாதங்கள் தண்டனையும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT