திண்டுக்கல்

பழனியில் பசும்பொன் தேவா் 115வது ஜெயந்திவிழா

31st Oct 2022 04:30 AM

ADVERTISEMENT

பழனி அடிவாரத்தில் மலைக்குச் செல்லும் வழியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு சிலை பாதுகாப்பு கமிட்டியினா், முன்னாள் கவுன்சிலா் முருகானந்தம் மற்றும் பலா் பொங்கல் வைத்து, மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, அடிவாரம் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தாா். பின்னா், பல்வேறு கட்சி நிா்வாகிகளும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். திமுக சாா்பில் நகரச் செயலாளா் வேலுமணி, அதிமுக சாா்பில் நகரச் செயலாளா் முருகானந்தம், அமமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா்கள் வழக்குரைஞா்

தினேஷ்குமாா், பொருந்தல் ரவீந்திரன், பாஜக சாா்பில் மாவட்டச் செயலாளா் கனகராஜ், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், பல்வேறு அமைப்பு நிா்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT