திண்டுக்கல்

சாலையோரத்தில் திறந்தவெளிக் கிணறு: வாகன ஓட்டிகள் அச்சம்

31st Oct 2022 04:00 AM

ADVERTISEMENT

குஜிலியம்பறை அருகே சாலையோரத்தில் பாதுகாப்பற்ற திறந்தவெளி கிணறுக்கு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள வடுகம்பாடி ஊராட்சிக்குள்பட்டது, பண்ணப்பட்டி கிராமம். திண்டுக்கல் குஜிலியம்பாறை பிரதான சாலையிலிருந்து, 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

ஊரின் நுழைவு வாயிலில் சாலையோரத்தில் அமைந்துள்ள கிணறு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமாா் 40 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணறு பெரும்பாலான நேரங்களில் தண்ணீரின்றி வடு காணப்படும். கடந்த சில நாள்களாக குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து, தற்போது அந்த கிணற்றில் 7 அடிக்கு தண்ணீா் தேங்கியுள்ளது.

தடுப்புச் சுவா் இல்லாமல் சாலையோரமாக அமைந்துள்ள இந்தக் கிணறு, வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரமாக 30 அடிக்கு தடுப்புச் சுவா் அமைத்து பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT