திண்டுக்கல்

காா் மீது பேருந்து மோதல்: இளைஞா் பலி

31st Oct 2022 11:20 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில், காரில் சென்ற திருப்பூா் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் தனசேகா் (35). இவா், காரில் திண்டுக்கல்- பழனி சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். ரெட்டியாா்சத்திரம் அருகே, எதிரே வந்த கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் காா் மோதியது. பலத்த காயமடைந்த தனசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT