திண்டுக்கல்

வடமதுரை அருகே விபத்து: 2 போ் பலி

26th Oct 2022 02:14 AM

ADVERTISEMENT

வடமதுரை அருகே சைக்கிள் மீது காா் மோதியதில், பிகாா் இளைஞா் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த சிறுவன் ஆகிய 2 போ் உயிரிழந்தனா்.

பிகாா் மாநிலம், நாலந்தா மாவட்டம், பிலாரிப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் லெட்டன் பிரசாத் (37). இவா் வடமதுரையை அடுத்துள்ள ஒரு தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தாா். இவா், ஒரு சைக்கிளில் திருச்சி-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வேல்வாா்கோட்டை பிரிவு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

அப்போது கேரள மாநிலம் மறையூரைச் சோ்ந்த ஜாா்ஜ் வின்சென்ட் என்பவா் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் வேளாங்கண்ணியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்தாா்.

அந்த காா், சைக்கிள் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த லெட்டன் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் இருந்த ஜாா்ஜ் வின்சென்ட்டின் மகன் எரிக்(11) பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி எரிக் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, வடமதுரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT