திண்டுக்கல்

காட்டுப்பன்றி வேட்டையாடிய இளைஞருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

26th Oct 2022 02:16 AM

ADVERTISEMENT

பழனி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய இளைஞருக்கு வனத்துறையினா் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஓடைக்காடு கிராமத்தில், திங்கள்கிழமை பழனி வனச்சரகா் பழனிக்குமாா் தலைமையில் வனக் காவலா்கள் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, கலையம்புத்தூரைச் சோ்ந்த வல்லரசு(32) காட்டுப்பன்றியை வேட்டையாடி மாமிசத்தை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, வல்லரசு மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினா், எட்டு கிலோ காட்டுப் பன்றி மாமிசத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT