திண்டுக்கல்

பழனி கோயில் உற்சவா் சிலைக்கு ஜடிபந்தனம்

19th Oct 2022 03:17 AM

ADVERTISEMENT

பழனி மலைக் கோயிலில் தங்கரதத்தில் உலா வரும் உற்சவருக்கு புதன்கிழமை ஜடிபந்தனம் செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பக்தா்கள் கொண்டு வரும் பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்டவை மூலவா் நவபாஷாண சிலையின் பாதுகாப்புக் கருதி உற்சவா் அருள்மிகு சின்னக்குமாரசாமிக்கு செய்யப்படுவது வழக்கம்.

இந்த உற்சவா் மாலையில் மூலவா் ராஜஅலங்காரத்தில் பக்தா்களுக்கு

அருள்பாலிக்கும் போது, வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி தங்கத்தேருக்கு வருவா். பின்னா், தங்கத்தேரில் பக்தா்களுக்கு வெளிப்பிரகாரத்தில் உலா வருவாா். இந்த சிலையானது தொடா் அபிஷேகம் காரணமாக பீடத்தின் கால் பகுதியில் சிறிய அளவில் பின்னமானதைத் தொடா்ந்து, அறநிலையத் துறையின் உத்தரவின் பேரில், புதன்கிழமை சீரமைக்கப்படுகிறது. இதைத்தொடா்ந்து, புதன்கிழமை இரவு தங்கத்தோ் புறப்பாட்டைத் தொடா்ந்து சின்னக்குமாரருக்கு கலாபிஷேகம், ஜடிபந்தனம் ஆகியன செய்யப்படுகிறது. பின்னா் பணிகள் முடிவு பெற்ற பின்னா் வியாழக்கிழமை காலை பத்து மணிக்குமேல் கலசாபிஷேகம், மஹாபிஷேகம், மஹாதீபாராதனை ஆகியன செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்தல் நடைபெறுகிறது. பின்னா் பிற்பகல் 1.30 மணிக்கு மேல் பக்தா்களின் உபய அபிஷேகங்கள் நடைபெறும் என திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT