திண்டுக்கல்

கொடைரோடு அருகே தமுமுகவினா் சாலை மறியல்

DIN

கொடைரோடு அருகே தமுமுகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாப்புலா் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமுமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, வெளிமாவட்டங்களில் இருந்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பல்வேறு வாகனங்களில் வந்தனா். அவா்களை போலீஸாா் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், தடுத்து நிறுத்தினா்.

இதனால், திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு சுங்கச்சாவடி மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளபட்டி பிரிவு அருகே உள்ள சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சி தொண்டா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், இருபுறமும் வாகனங்கள் பல கிலோமீட்டா் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதையடுத்து, அங்கு வந்த திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமாா் மீனா, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன்பின் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மதுரை செல்ல அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு பதற்றத்தை தணிக்க ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT