திண்டுக்கல்

பழனி அருகே ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

DIN

பழனி அருகே வெள்ளிக்கிழமை, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினா்.

பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியிலிருந்து செங்குளத்திற்கு செல்லும் ஓடை பல இடங்களில் அப்பகுதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதன் பரப்பளவு குறைந்து வருவதால் விவசாயத்துக்கு குறைந்த அளவு நீரே வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி சாா்பில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் வந்தனா். ஆனால் ஆக்கிரமிப்பாளா்கள் பொக்லைன் இயந்திரம் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சத்திரப்பட்டி காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி முறையாக புகாா் அளிக்குமாறும், மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.

இதையடுத்து அவா்கள் கலைந்து சென்ற நிலையில், ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT