திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

7th Oct 2022 12:11 AM

ADVERTISEMENT

 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் எம். முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் டி. தீத்தான் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சிஐடியு மாவட்டத் தலைவா் கே.ஆா். கணேசன், செயலா் கே. பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வழங்கியதை போன்று நடப்பாண்டிலும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட பெண் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ. ஆயிரத்தை ரூ. 3ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். நல வாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீடு கட்டும் கடன் தொகை ரூ. 4 லட்சம் வழங்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT