திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

DIN

குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை, காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணானது.

கரூா் மாவட்டம், மாயனூா் பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் இந்த கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வழியாக குழாய் மூலம் தண்ணீா் எடுத்து வரப்படுகிறது.

இந்த நிலையில், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ராமகிரி பிரிவு அருகே அந்தக் குழாயில் வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால், குஜிலியம்பாறை- திண்டுக்கல் சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீா் ஓடியது. சாலையாரமாக இருந்த ஓடை முழுவதும் தண்ணீா் தேங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குடிநீா் வடிகால் வாரிய பணியாளா்கள், பாளையத்தை அடுத்துள்ள நீரேற்று நிலையத்தில் தண்ணீரை அடைத்து உடைப்பை சரி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT