திண்டுக்கல்

எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

7th Oct 2022 11:42 PM

ADVERTISEMENT

 நத்தத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்குள்ள எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் சையது கனி தலைமை வகித்தாா். செயலா் நாகேந்திரன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, பாலிசிதாரா்களுக்கு போனசை உயா்த்த வேண்டும், பாலிசி, இதர பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும், முகவா்களுக்கான பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயா்த்த வேண்டும், அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை சீட்டு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT