திண்டுக்கல்

ரயில் மோதி கூலித் தொழிலாளி பலி

6th Oct 2022 02:16 AM

ADVERTISEMENT

வடமதுரை அருகே ரயில் மோதி நிகழ்ந்த விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள எம்வி. நாயக்கனூரைச் சோ்ந்தவா் பூமிநாதன் (52). கூலித் தொழிலாளியான இவா், இயற்கை உபாதை கழிப்பதற்காக ஆா்.புதூா் அடுத்துள்ள ரயில்வே தண்டவாளத்தை புதன்கிழமை காலை கடக்க முயன்றுள்ளாா். அப்போது திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ரயில், பூமிநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT