திண்டுக்கல்

வேளாண் பட்டதாரிகள் 25 சதவீத மானியத்தில் சுய தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

6th Oct 2022 02:15 AM

ADVERTISEMENT

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 68 ஊராட்சிகளைச் சோ்ந்த வேளாண் பட்டதாரிகள் 25 சதவீத மானியத்தில் சுயதொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மற்றும் அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 68 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞா்களை தொழில் முனைவோராக உயா்த்தும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு 25 சதவீதம் மானியத்தில் அதிகபட்ச நிதி உதவியாக ரூ. 1 லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

21 முதல் 40 வயதுக்குள்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அரசு அல்லது தனியாா் நிறுவனங்களில் பணிபுரியக் கூடாது. குடும்பத்திற்கு ஒருவா் மட்டுமே பயன்பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்களை நிறுவ வேண்டும். விருப்பமுள்ளவா்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவற்றை ‘அக்ரிஸ்நெட்’ என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT