திண்டுக்கல்

செம்பட்டி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதல்: 3 மாதக் குழந்தை பலி

6th Oct 2022 02:15 AM

ADVERTISEMENT

செம்பட்டி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்த 3 மாதக் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திண்டுக்கல் அருகே போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (28). இவா் திண்டுக்கல்லில் கைப்பேசி விற்பனைக் கடை வைத்துள்ளாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி விஜயலட்சுமி (26) மற்றும் மகள்கள் சாய்பிரதிஷா (4), 3 மாதப் பெண் குழந்தை குருசாவிதா ஆகியோருடன் வத்தலகுண்டில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனா்.

செம்பட்டி - வத்தலகுண்டு சாலை, பாளையங்கோட்டை பிரிவில் வந்தபோது, இவா்களது வாகனம் மீது காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அன்புச்செல்வன், விஜயலட்சுமி உள்ளிட்ட 4 பேரும் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த, 3 மாதக் குழந்தை குருசாவிதா புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT