திண்டுக்கல்

விஜயதசமியை முன்னிட்டு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி

6th Oct 2022 02:15 AM

ADVERTISEMENT

விஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கோயில்கள் மற்றும் தனியாா் பள்ளிகளில் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்கள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மஞ்சள் கலந்த பச்சரிசியில் உயிரெழுத்தின் முதல் எழுத்தான ‘அ’ வை குழந்தைகளின் விரலைக் கொண்டு எழுத வைத்தனா்.

சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மழலையா் பள்ளியில் சோ்க்கை பெற்ற குழந்தைகளுக்கு ‘அ’ எழுத்தைத் தொடா்ந்து, ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத வைத்தனா். எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் பெற்றோா்கள் மற்றும் உறவினா்களும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT