திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் பொறுப்பேற்பு

6th Oct 2022 02:14 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக ஜி.ஆா். ராஜஸ்ரீ (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராகப் பணியாற்றி வந்த கே.கே. விஜயகுமாா், கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து மருத்துவக் கல்லூரிக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துவரும் வீரமணி, பொறுப்பு முதன்மையராக செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துக் கல்லூரியில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த ஜி.ஆா். ராஜஸ்ரீ, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக நியமிக்கப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இந்த கல்லூரியின் 2ஆவது முதன்மையா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT