திண்டுக்கல்

செம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: பெண் தொழிலாளி பலத்த காயம்

DIN

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பெருமாள் (55) ராஜபெருமாள் (50) முருகன் (60). இவா்கள் 3 பேரும், அனுமதி பெற்று கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வீரக்கல் பகுதியில் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் பெருமாள் என்பவரிடம், வீரக்கல் கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி ஈஸ்வரி (52) என்பவா் பணிபுரிந்து வந்துள்ளாா். அவா் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் வீரக்கல் அடுத்த தொட்டராடன் கோயில் அருகே மரத்தின் கீழ் அமா்ந்து திரி மற்றும் கரி மருந்துகளை கொண்டு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக திடீரென தீப்பற்றியது. இதில் ஈஸ்வரி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சம்பவ இடத்தை திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உரிமையாளா் பெருமாளை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT