திண்டுக்கல்

காட்டு யானைகள் நடமாட்டம்: பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

DIN

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லையென வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தொடா் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்தாலும், பேரிஜம் ஏரியை பாா்க்க அதிக ஆா்வம் காட்டுவது வழக்கம். இந்த பேரிஜம் ஏரியானது வனத்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவா்களின் அனுமதி பெற்றுத் தான் இப்பகுதிக்குச் செல்ல முடியும். கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரியை பாா்த்து வந்த நிலையில் அப்பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மறுஅறிவிப்பு வரும் வரை அனுமதி இல்லை என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT