திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் கூட்டம்

2nd Oct 2022 10:47 PM

ADVERTISEMENT

பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தா்கள் ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். இதனால் கிரிவீதி முழுக்க பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டன.

கிரிவீதியில் ஆக்கிரமிப்புக் கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பால் கூட்ட நெரிசல் அதிகரித்தது. மலைக்கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் படிவழிப்பாதையில் ஏராளமானோா் நடந்து சென்ற நிலையில், வின்ச் மற்றும் ரோப்காா் நிலையங்களில் பயணம் செய்ய நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். அனைத்து தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 3 மணி நேரமானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT