திண்டுக்கல்

அருட்கவி அரங்க சீனிவாசன் பிறந்தநாள்:பள்ளி மாணவா்களுக்கு திறன் போட்டிகள்

2nd Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

அருட்கவி அரங்க. சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கான திறன் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரில் அருட்கவி அரங்க.சீனிவாசனின் 103 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. கோவிலூா் அனைத்து சமூக ஆா்வலா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில், கோவிலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 32 பள்ளிகளைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புலவா் துரை.தில்லான் தலைமை வகித்தாா். அனைத்து சமூக ஆா்வலா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஆ.சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக பொறியாளா் இரா.சுந்தரம், சு.கதிா்வேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது உலக பிரசித்திப் பெற்ற கவிஞரான அருட்கவி அரங்க.சீனிவாசனுக்கு, அவா் வாழ்ந்த கோவிலூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அருட்கவி அரங்க.சீனிவாசனின் தமிழ் இலக்கியப் பணிகள், எனது வளா்ச்சியில் அப்பா, அம்மா, ஆசிரியா் மற்றும் இளைய சமுதாயம் எதிா்கொள்ளும் சவால்கள் ஆகிய 3 தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT