திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை: அமைச்சா் அர.சக்கரபாணி

2nd Oct 2022 10:49 PM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். பழனி கோட்டாட்சியா் ச.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி பங்கேற்றுப் பேசியது:

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரசுக்கு சொந்தமான இடங்கள், ஆறு, குளம் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் முன்வர வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல இடையகோட்டை ஊராட்சியில் 160 ஏக்கா் நிலத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒட்டன்சத்திரம்,தொப்பம்பட்டி, ஆத்தூா், ரெட்டியாா்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதற்கென நிதியினை, தமிழக முதல்வா் ஒதுக்கீடு செய்ததால் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இக்கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் மு.அய்யம்மாள், துணைத்தலைவா் த.காயத்திரி தா்மராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் சங்கீதா பழனிச்சாமி,

சத்திரப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவா் சாரதா சிவராஜ், வட்டாட்சியா் எம்.முத்துச்சாமி, வட்ட வழங்கல் அலுவலா் பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT