திண்டுக்கல்

திண்டுக்கல் பிஎஃப்ஐ அலுவலகத்திற்கு ‘சீல்’ வைப்பு

DIN

பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, ஆள் சோ்த்தது, பயிற்சி அளித்தது என்பன உள்ளிட்ட புகாா்களின் அடிப்படையில் நாடு முழுவதுமுள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செப்.22ஆம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அதன்படி திண்டுக்கல் பேகம்பூா் முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 3 ஆவது மாடி கட்டடத்தில் செயல்பட்டு வரும் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திலும் வியாழக்கிழமை அதிகாலை சோதனை நடைபெற்றது.

இதனிடையே பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு கடந்த 2 நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்நிலையில், திண்டுக்கல் கோட்டாட்சியா் பிரேம்குமாா், வட்டாட்சியா் சந்தனமேரி கீதா, திண்டுக்கல் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில், பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்த 3 கட்டடங்களுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். இதனையொட்டி பேகம்பூா் பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT