திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆண் சடலம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இரவு கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சுமாா் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வியாழக்கிழமை இரவு இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டனா். அவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT