திண்டுக்கல்

அக். 10-இல் இளையோா் திருவிழா போட்டிகள்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

இளையோா் திருவிழா போட்டிகள் வேலூரில் அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், மாவட்டத்திலுள்ள 15 முதல் 29 வரை வயதுக்குட்பட்ட இளைஞா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய இளைஞா் நலம், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேலூா் மாவட்ட நேரு இளையோா் மன்றம் சாா்பில், இந்திய சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி, இளையோா் திருவிழா வேலூரில் அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, இளம் ஓவியா், எழுத்தாளா் (கவிதை), புகைப்படம், பேச்சுப் போட்டி, இளையோா் கலை விழா, மாவட்ட இளையோா் கருத்தரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

இந்தப் போட்டிகளில் வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த 15 முதல் 29 வரை வயதுடைய இளையோா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில் வெற்றி பெறும் இளையோா்களுக்கு சான்றிதழ், பரிசுகளும், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து நேரடியாகவோ அல்லது க்ஹ்ஸ்ரீய்ஹ்ந்.ஸ்ங்ப்ப்ா்ழ்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகவோ மாவட்ட இளைஞா் அலுவலா், நேரு இளையோா் மன்றம், விஐடி மெயின் கேட் எதிரில், காட்பாடி, வேலூா் - 632 014, கைப்பேசி எண்-99404 20412, 78710 18253 என்ற முகவரியில் அக்டோபா் 3-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT