திண்டுக்கல்

புதிய மாவட்டக் கல்வி அலுவலா்கள் பொறுப்பேற்பு

1st Oct 2022 10:51 PM

ADVERTISEMENT

 

தொடக்கக் கல்வி மாவட்டம், தனியாா் பள்ளிகளுக்கான கல்வி அலுவலா் பணியிடங்கள் மீண்டும் உருவாக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அலுவலா்கள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் 1,978 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் முழுவதும், பழனி மற்றும் திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக். பள்ளி ஆய்வாளா் அலுவலகம் மூலமாக நிா்வகிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரிக் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக நிா்வாகம் கலைக்கப்பட்டு, வேடசந்தூா் மற்றும் வத்தலகுண்டு கல்வி மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட புதிய கல்வி மாவட்டங்களை நீக்கியும், தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மெட்ரிக். பள்ளி ஆய்வாளா் அலுவலகங்களை மீண்டும் உருவாக்கியும் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் நீக்கப்பட்டு, திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களும், தனியாா் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலகமும் சனிக்கிழமை (அக்.1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

ADVERTISEMENT

பழனி மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) பி.திருநாவுக்கரசு செயல்பட்டு வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) இ.பாண்டித்துரை, திண்டுக்கல் தொடக்கக் கல்வி அலுவலராக ரா.வளா்மதி, ஒட்டன்சத்திரம் தொடக்கக் கல்வி அலுவலராக பெ.ஜெகநாதன், தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலராக ச.ராகவன் ஆகியோா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT