திண்டுக்கல்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ‘போக்சோ’வில் விவசாயி கைது

1st Oct 2022 10:53 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானல் அருகே பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவரை ‘போச்சோ’ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கிருஷ்ணன் (51). இவருக்கு 2 மனைவிகள் 4 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கிருஷ்ணன், அதே பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளாா். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் மகளிா் காவல் துறையினா் விசாரணை நடத்தி கிருஷ்ணனை ‘போச்சோ’ சட்டத்தில் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT