திண்டுக்கல்

அமைச்சா்களிடம் வாழ்த்துப்பெற்ற திமுக புதிய நிா்வாகிகள்

1st Oct 2022 10:52 PM

ADVERTISEMENT

 

நத்தம் தொகுதியிலிருந்து புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள திமுகவினா், அமைச்சா்களை சந்தித்து சனிக்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுகவில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.ஏ.ஆண்டி அம்பலம் மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஜயன், மாவட்டப் பொருளாளராகவும், நத்தம் பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்சா மற்றும் முத்துகுமாரசாமி ஆகியோா் மாநில பொதுக்குழு உறுப்பினா்களாகவும், சுந்தர்ராஜன் மாவட்ட துணைச் செயலாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலரும் உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலா் பெ.செந்தில்குமாா் ஆகியோரை புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். மேலும், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக நிா்வாகிகளுக்கு நத்தம் பகுதியைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT