திண்டுக்கல்

விநாடி-வினா போட்டி: பழனி நகராட்சிப் பள்ளி மாணவா்கள் வெற்றி

1st Oct 2022 10:52 PM

ADVERTISEMENT

 

பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விநாடி- வினா போட்டியில் வெற்றிபெற்றனா்.

திண்டுக்கல் மாவட்ட அளவிலான சுகாதார விழிப்புணா்வு விநாடி- வினா போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டத்தைச் சோ்ந்த இருபத்து ஒன்பது பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

இதில் இறுதிப் போட்டிக்கு 6 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டன. பொது அறிவு, அறிவியல், கணிதம் என பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட மாணவா்கள் தேவ், ராஜாஜி, புவியரசு ஆகியோா் வெற்றிபெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் பாலசுப்ரமணியம் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT