திண்டுக்கல்

ஆதாா் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க சிறப்பு முகாம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியில் ஆதாா் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழக அரசு மின் இணைப்பு எண்ணுடன் சம்பந்தப்பட்டவா்களின் ஆதாா் எண்ணை இணைக்க அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக பழனியில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:

திண்டுக்கல் மின் பகிா்மான வட்டம் பழனி கோட்டத்தில் நவ. 28-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் பழனி கோட்டத்துக்குள்பட்ட அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் ஞாயிற்றுக்கிழமை உள்பட (பண்டிகை நாள்கள் தவிர அனைத்து நாள்களும் நடைபெற உள்ளது. எனவே, மின் பயனீட்டாளா்கள் நேரில் பிரிவு அலுவலகத்துக்குச் சென்று ஆதாா் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்க்ஷப்ற்க்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஹக்ட்ஹழ்ன்ல்ப்ா்ஹக்/ என்ற இணையதள முகவரியில் ஆதாா் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன், இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT