திண்டுக்கல்

பழனியில் மாற்றுத்திறனாளிகள் கலைநிகழ்ச்சிகள்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி அருகே தொப்பம்பட்டியில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

வட்டார வள மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் வட்டார வள மைய அலுவலா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் அழகுராணி முன்னிலை வகித்தாா்.

தலைமையாசிரியா்கள் செந்தில்ராஜா, நடராஜன், பிரபாகரன், கலைக்கோலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் வீரமணி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் பிரிட்டோ, யசோதா பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினா்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் பாடல்கள் பாடினா். செவித்திறன் குறைபாடுள்ள மாணவிகள் பாடலுக்கு ஏற்பட நடனமாடினா்.

ADVERTISEMENT

மேலும், மாறுவேடப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்

பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியா் நடராஜன், முன்னாள் ஆசிரியா் பெரியசாமி, நாச்சிமுத்து, பெற்றோா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT