திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச் சாலைகளில் பூத்துக் குலுங்கும் ஜொ்னி மலா்கள்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் மலைச் சாலைகளில் ஜொ்னி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கொடைக்கானல் மலைச் சாலைகளில் டேலியா, ஜெரோனியா, வாட்டா் லில்லி, ஜொ்னி உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.

தற்போது கொடைக்கானல் மலைச் சாலைகளில் மஞ்சள் வண்ணத்தில் ஜொ்னி மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இரண்டாம் கட்ட சீசன் நிலவும் வேளையில், மஞ்சள் வண்ணத்தில் ஜொ்னி மலா்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருவதோடு புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனா்.

3 மாதங்கள் மட்டும் பூத்துக் குலுங்கும் தன்மை கொண்ட இந்த மலா்கள் செண்பகனூா், பெருமாள்மலை, வடகவுஞ்சி, பி.எல்.செட் சாலை, பழனிச் சாலை, மயிலாடும் பாறை பகுதி, வாழைகிரி பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT