திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு வட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று குறைதீா் கூட்டம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை (நவ.30) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் கோட்டாட்சியா் கு.பிரேம்குமாா் வெளியிட்ட செய்தி குறிப்பு:

திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம். சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் பரிந்துரைக்கப்பட்டு உரிய தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT